இபிஎஃப்ஓ (EPFO ) அமைப்பு நாட்டில் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
இதன் மூலம் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜூலை 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.
Cute charge.. என் அழகுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்த இண்டிகோ.. ட்விட்டர் பயனர் கல கல!

ஒரே நேரத்தில் அனைவருக்கும் பேமெண்ட்
இபிஎஃப்ஓ அமைப்பின் புதிய திட்டத்தின் படி 73 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், ஒரே நேரத்தில் ஓய்வூதியம் பெற முடியும் என கூறப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு தான் வரவிருக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு தேதிகளில் ஓய்வூதியம்
இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஓய்வூதியம் பெறும் 73 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பயனடையலாம். தற்போது 138 இபிஎஃப்ஓ மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளில் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஆனால் அரசின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைவரும் ஒரே நேரத்தில் ஓய்வூதியம் பெறலாம்.

ஒருங்கிணைந்த தொழில்னுட்பம்
கடந்த ஆண்டு நடைபெற்ற 229வது கூட்டத்தில் இபிஎஃப்ஓ அமைப்பின் குழு, ஒருங்கிணைந்த தொழில் நுட்ப முறையை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் போலியான கணக்குகள் உருவாக்கப்படுவது தடுக்கப்படலாம். இது பயனர்களுக்கு மேற்கோண்டு பயனுள்ளதாக இருக்கும்.

இதுவும் அமலுக்கு வருமா?
அது மட்டும் அல்ல, பிஎஃப் கணக்கில் டெபாசிட்களை 6 மாதத்திற்குள் குறைவாக டெபாசிட் செய்திருந்தாலும், பயனர்கள் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 6 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையில் பங்களிப்பு செய்திருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது. ஆக இதுவும் அமலுக்கு வந்தால் பிஎஃப் பயனர்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
EPFO plans to credit pension to over 73 lakh pensioners
EPFO plans to credit pension to over 73 lakh pensioners/EPFO புதிய அலர்ட்.. ஓரே நேரத்தில் 73 லட்சம் பேருக்கும் பேமெண்ட்.. செம திட்டம்..!