மும்பை: சமீபகாலமாக பாலிவுட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பதை தொடர்ந்து, நடிகை கத்ரினா கைப் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளது. நேற்று அவரது 39வது பிறந்தநாள். இதையொட்டி மும்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கத்ரினா கைப் கர்ப்பமாக இருப்பது உறுதி. அவரும், நடிகர் விக்கி கவுசலும் தங்கள் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த தகவலை கத்ரினா கைப் தன் பிறந்தநாளில் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று தெரிகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விக்கி கவுசல், கத்ரினா கைப் மற்றும் நண்பர்கள், தோழிகள் மாலத்தீவு சென்றிருக்கின்றனர். அங்கு கத்ரினா கைப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர் அம்மா ஆகும் தகவலை எப்போது வெளியிடுவார் என்று மும்பை ஊடகங்கள் காத்திருக்கின்றன.
