இங்கிலாந்திலுள்ள எசெக்சில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆறு மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Clacton என்ற இடத்தில் நடந்த அந்த விபத்தில் பெண் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட, குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த தொடர்புமில்லை என கூறப்படுகிறது.
இந்த விபத்தைக் கண்ட யாராவது இருந்தால் உடனடியாக தங்களுக்குத் தகவலளிக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.