இது என்ன இந்துமத ஆட்சியா?.. அரசு விழாவில் பூஜை செய்தவர்களிடம் செந்தில்குமார் எம்.பி ஆவேசம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியின்போது பூமி பூஜைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சென்ற எம்.பி செந்தில்குமார் இது திராவிட ஆட்சியா அல்லது இந்துமத ஆட்சியா என வெகுண்டெழுந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைக்க வருகைபுரிந்தார். அப்போது பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய ஐயர் ஒருவரை வரவழைக்கப்பட்டு தேங்காய் வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்களை வைத்திருந்தனர். இதைக் கண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா என கேட்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்.

Trying to Keep my cool.
At times they make me to lose my patience. pic.twitter.com/l1gHdhYkQa
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 16, 2022

மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு, அனைத்து மதத்தினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும், அப்படியில்லை என்றால் எந்த மதத்தின் அடிப்படையிலும் நடைபெறக் கூடாது என கடுமையாக சினத்தோடு பேசினார். பின்பு அனைத்து சம்பிரதாய பொருட்களையும் அகற்றிவிட்டு பின்பு சீரமைக்கு பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மேலும் பூஜை பொருட்களை கண்டதும், எம்பி கோபமடைந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.