எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுத் திட்டம் ஆரம்பம்

புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான இணையதளம்  http://fuelpass.gov.lk  என்பதாகும்.

இந்த நடைமுறையின் கீழ் பதிவை மேற்கொண்ட பின்னர் ,சிபேட்கோ அல்லது லங்கா IOC எரிகொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வாராந்தம் தேவையான எரிபொருள் கோட்டாவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கங்சன விஜேசேகர தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன Chassis இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE  புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்த தகவல் தணைக்களத்தில் இன்று (16) நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
இந்த பதிவை மேற்கொள்ளும் போது இரண்டு வாகனங்களை வைத்திருப்பவர்கள் தமது வீட்டில் இருக்கும் மற்றுமொரு நபரின் தேசிய அடையாள அட்டைக்கு கடவுச்சிட்டுக்கு அல்லது வாகன பதிவு சான்றிதழின் கீழ் இணைந்துகொள்ள முடியும்.

ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

ஒரு தேசிய அடையாள அட்டைக்கு, ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் வகையில் தேசிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும்

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் எமக்கு நிதி ரீதியில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்பட்டது. 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட முதலாவது டீசல் கப்பலே இவ்வாறு இலங்கையை வந்தடைந்தது. இதன் தரம் தொடர்பிலான நிருவாக நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன. இதேவேளை மற்றுமொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேபோன்று மற்றுமொரு பெற்றோலுடனான கப்பல் இம்மாதம் 18 ஆம் திகதி அல்லது 19 ஆம் திகதி நாட்டைவந்தடையும் என எதிர்பார்க்கின்றோம். மற்றுமொரு பெற்றோலுடனான கப்பல் இம்மாதம் 22.அல்லது 23 ஆம் திகதி இலங்கையை வந்தடையும். இவற்றுக்கான கொடுப்பனவு திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுடன் அமைச்சின் ஊடாக  செலுத்தப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் கூறினார்.

இவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதாவது CEYPETCO மூலம் வியோக நடவடிக்கை மேற்கொள்ள்ப்படும் என்றும் மின் சக்தி எரி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.