திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்படவும், வாகனங்களில் கற்கள், சல்லி, சரளைமண், எம்.சாண்ட் கொண்டு செல்லவும் இருந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது.
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகளை மூடவும், கற்கள், சல்லி, சரளைமண், எம்.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு செல்லவும் வாய்மொழியாகத் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்துத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், இரண்டு மாதங்களாகக் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வழக்குத் தொடுத்த 12 குவாரிகளுக்குத் தடையை நீக்கியும், திருநெல்வேலி மாவட்டக் கனிமவளத்துறை இணை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.