Jio free data offers: நீங்கள் லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Jio HP Smart SIM Laptop சலுகை ஒன்று உங்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியான பயனர்களுக்கு ஹெச்பி ஸ்மார்ட் சிம் மடிக்கணினி உடன் கூடுதல் கட்டணமின்றி 100 ஜிபி டேட்டா கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட HP மடிக்கணினிகளை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. புதிய HP LTE லேப்டாப்களுடன், 365 நாள்களுக்கு 100ஜிபி டேட்டாவுடன் புதிய ஜியோ சிம் சந்தா கிடைக்கும்.
ரிமோட்டாக மாறும் Xiaomi Smart Speaker; ஸ்மார்ட் வீட்டை இனி எளிதாக உருவாக்கலாம்!
HP 14ef1003tu, HP 14ef1002tu ஆகிய இரு மடிக்கணினி வகைகளும் இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்ததாக பட்டியலிடப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் வாங்கப்பட்ட ஹெச்பி ஸ்மார்ட் லேப்டாப்பில் ஜியோ ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப் சலுகையின் பலன்கள் கிடைக்கும். அல்லது JioMart.com மூலம் ஆன்லைனிலும் வாங்கலாம்.
மடிக்கணினியுடன் இலவச ஜியோ சிம்
வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி புதிய ஜியோ சிம்மைப் பெறலாம். ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் ரூ.1500 மதிப்புள்ள 100ஜிபி டேட்டா பயனர்களுக்காக வழங்கப்படுகிறது. MyJio அல்லது Jio.com சென்று ரீசார்ஜ் செய்வதன் மூலம், கூடுதலாக அதிவேக 4G டேட்டாவை பயனர்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
Canon Selphy பிரிண்டர் உங்கள் நினைவுகளின் நாயகன் என்று சொன்னால் நம்புவீர்களா?
கடைகளில் வாங்கலாம்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிலிருந்து புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை வாங்கவும். HP Smart LTE 100GB டேட்டா சலுகையில் (ஆஃபர் பெயர் FRC 505) புதிய ஜியோ சிம்மை இயக்க ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் நிர்வாகியிடம் கேளுங்கள். ஆவணப்படுத்தலுக்கு உங்கள் சான்றிதழ் விவரங்களை அளியுங்கள். செயல்படுத்தப்பட்டதும், HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் சிம்மைச் செருகி, இணைய பலனை அனுபவியுங்கள்.
iPhone 13 Offers: ஐபோன் 13 மினி இப்போது அதிரடி தள்ளுபடி விலையில்; ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
ஆன்லைனில் ஆஃபரை பெறுவது எப்படி?
புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை ஆன்லைனில் Reliancedigital.in அல்லது Jiomart.com இல் வாங்கவும். வாங்கிய 7 நாள்களுக்குள் கொள்முதல் விலைப்பட்டியல், மடிக்கணினியுடன் அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்குச் செல்லவும்.
HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் 100 ஜிபி டேட்டா ஆஃபர் (FRC 505) இல் புதிய ஜியோ இணைப்பைச் செயல்படுத்த ஸ்டோர் நிர்வாகியிடம் கேளுங்கள். தேவையான ஆவணங்களை சமர்பித்து, சிம் கார்டை ஆக்டிவேட் செய்யுங்கள். தொடர்ந்து சிம்மை மடிக்கணினியில் உள்ளிட்டு டேட்டாவை பயன்படுத்துங்கள்.