அதிமுகவிலிருந்து மேலும் இரண்டு பேர் நீக்கப்படுவதாக, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக சற்று முன்பு அறிவித்துள்ளார்
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை கொலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கீழ்க்கண்டவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
1) எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் அமலன் பி ராம்ராஜ் சாம்ராஜ்
2) அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் – அதிகாரபூர்வமாக தனது ஆதரவை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.!#ADMK #OPS #DMK #MKStalin #TNGovt #EPS #EdappadiPalaniswami #OPannerselvam #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/q10WuxmchV
— Seithi Punal (@seithipunal) July 16, 2022