முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் – திருச்சி ஆட்சியர்

Trichy collector says Kollidam Bridge closed for maintenance: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலைப் பிள்ளையார் புதூர் மாயனூர் கதவணைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 66 ஆயிரத்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கின்றது.

இங்கிருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 65,847 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தகவலை மாயனூர் ஆற்றுப் பாசன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: காவிரி தண்ணீர் கடை மடைக்கு போகவில்லையா? அமைச்சர் நேரு விளக்கம்

அதேநேரம் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்தநீர் அப்படியே மாயனூர் கதவனைக்கு வந்துவிட்டபடியால் மதகுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டிருக்கின்றது.

இதனால் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் இன்று மாலை முதல் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் கரையோரங்களில் இறங்க வேண்டாம் எனவும், கொள்ளிடம் ஆற்றில் உள்ள சலவைத்தொழிலாளிகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

புதிய கொள்ளிடம் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.