இத்தாலியில் ஹொட்டல் ஒன்றில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானியர் ஓய்வுபெற்ற ரக்பி நட்சத்திரம் ரிக்கி பிபே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவருடன் காணப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் புளோரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கான்டினென்டேல் ஹொட்டலுக்கு பொலிசார் அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், பிரித்தானியர் ஒருவரை சடலமாக மீட்டனர்.

உள்ளூர் நேரப்படி பகல் 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மரணமடைந்த நபர் ஓய்வுபெற்ற ரக்பி நட்சத்திரம் ரிக்கி பிபே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் முழுவதும் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளதகவும், அவருடன் காணப்பட்ட பிரித்தானிய பெண்ணும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் ரத்தக்கறை கணப்பட்டுள்ளது எனவும், அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஹொட்டல் ஊழியர்களிடம் உதவி கோரிய அந்த பிரித்தானிய பெண்மணி, தம்முடன் தங்கியிருந்த நபர் திடீரென்று சுருண்டு விழுந்தார் எனவும், மாரடைப்பாக இருக்கலாம் என தாம் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த தம்பதி தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து இரவு முழுக்க சத்தம் கேட்டதாகவும், அருகாமையில் உள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் ஹொட்டல் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.