2022 ,2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் விழ்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் திட்டம் தேவை என்று நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டர்லினா ஜார்ஜீவா Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகக்கூடிய கடன் மற்றும் வாழ்தாரக் கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்திற்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்ட முடியுமென்றும்  முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் சந்திப்பில் அவர் இந்தவிடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் பல நாடுகள் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவம் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.