எடியூரப்பாவுக்கு மரியாதை வழங்க காங்., – எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பெலகாவி : “முதலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மரியாதை கொடுங்கள்,” என, பா.ஜ.,வினருக்கு பெலகாவி ஊரக தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பால்கர் வேண்டுகோள் விடுத்தார்.பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கெல்லாம், நான் பதில் சொல்ல முடியாது. அவர்களது வீட்டை சரி செய்து கொள்ளுங்கள். முதலில் எடியூரப்பாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்கள்.இந்தியாவின் தெற்கில் முதலில் பா.ஜ., ஆட்சியை கொண்டு வர எடியூரப்பா தான் காரணம். அவருக்கு கொடுக்க வேண்டிய கவுரவத்தை கொடுங்கள்; அதன்பின், காங்கிரஸ் குறித்து பேசுங்கள்.காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் ஆகிய இருவருக்கும் போட்டி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.

குழந்தை பிறப்பதற்கு முன், அதற்கு பெயர் வைக்க முடியாது.எங்கள் கட்சியில் 125 எம்.எல்.ஏ.,க்கள் தேர்வாக வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் ஆகட்டும், மேலிடம் முடிவு செய்யட்டும். இப்போது யாரும், முதல்வர் பதவிக்கு மோதி கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.