எல்லா அரிசிக்கும் ஜிஎஸ்டி கிடையாது; இதற்கு மட்டும்தான்! மத்திய அரசு விளக்கம்!

வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வரி உயர்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடை வரையில் மூட்டையில் அடைக்கப்பட்ட தானியங்களுக்கு மட்டுமே 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Govt Plans to Impose 5% GST on Unbranded Packaged Rice; CAIT Raises Concerns
25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி, பருப்பு, மாவுவகைகள் போன்ற பொருட்கள் கொண்ட ஒற்றை சிப்பங்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிகப் பெயரில்லாத 25 கிலோ எடையுள்ள தானிய மூட்டைகளை உற்பத்தியாளரிடமோ அல்லது வினியோகஸ்தரிடமிருந்தோ வாங்கி அதை குறைந்த அளவுகளில் பிரித்து சில்லறையாக விற்பனை செய்வதற்கும் வரி இல்லை என அரசு கூறியுள்ளது.
GST for packaged food: Rice will become costlier - YesPunjab.comSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.