குழந்தையுடன் தாய் தற்கொலை | Dinamalar

ஷிவமொகா : வரதட்சணை கொடுமையால் விரக்தி அடைந்த பெண், குழந்தையுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிவமொகா, சொரபாவின் கப்பகளலே கிராமத்தை சேர்ந்தவர் சரத், 32; மனைவி நயனா, 27. இத்தம்பதிக்கு குருராஜ், 4, என்ற மகன் உள்ளார். திருமணம் ஆனதிலிருந்து, நயனாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

இதுபற்றி தன் பெற்றோரிடம் கூறி வருந்தினார்.பெற்றோரும் பல முறை, சரத் குடும்பத்தினருக்கு புத்திமதி கூறியும், அவர்களின் மனப்போக்கு மாறவில்லை. விரக்தி அடைந்த நயனா, நேற்று அதிகாலை மகனை துாக்கிட்டு கொன்று, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சொரபா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.