சிக்கபல்லாபூர் : தொட்டபல்லாபூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் பிரபலங்கள், தலைவர்கள் உருவப்படத்துடன் கூடிய பட்டம் பறக்க விடப்பட்டது. ஹர்ஷாவின் உருவப்படம் பொறித்த பட்டத்தை, அவரது குடும்பத்தினர் பறக்க விட்டனர்.பெங்களூரு ஊரகம் தொட்டபல்லாபூர், ‘காலிபட்டா கலா சங்கம்’ சார்பில் ‘பட்டம் விடும் திருவிழா’ நேற்று இங்குள்ள பகத் சிங் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் அரண்மனை, புத்தர், நடிகர் புனித் ராஜ்குமார் போன்ற பல்வேறு படங்கள் அடங்கிய பட்டங்கள் பறக்க விடப்பட்டன. அது போல விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷாவின் படத்துடன் கூடிய பட்டமும் பறக்க விடப்பட்டது.இதை ஹர்ஷாவின் தாயார் பத்மா, 45, சகோதரி அஸ்வினி, 27, ஆகிய இருவரும் பறக்க விட்டனர். அப்போது தொட்டபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வெங்கட ரமணய்யா, அவர்களுக்கு நிதி உதவி வழங்க முன்வந்தார். அவர்கள் வாங்க மறுத்து, ‘உங்கள் அன்பு மட்டும் போதும்’ என்றனர்.
சிக்கபல்லாபூர் : தொட்டபல்லாபூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் பிரபலங்கள், தலைவர்கள் உருவப்படத்துடன் கூடிய பட்டம் பறக்க விடப்பட்டது. ஹர்ஷாவின் உருவப்படம் பொறித்த பட்டத்தை, அவரது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்