மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள ரூ. 250 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடி ஹாங்காங்கில், போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டிபாசிட் என ரூ. 253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இதனை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள ரூ. 250 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்