ஐசிஐசிஐ வங்கி கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,616 கோடியாக இருந்த வரிக்கு பிந்தைய லாபம் (பிஏடி) 50 சதவீதம் உயர்ந்து ரூ.6,905 கோடி அளவீட்டை எட்டியுள்ளது.
வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.10,936 கோடியுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் அதிகரித்து ரூ.13,210 கோடியாக உயர்ந்து உள்ளது. காலாண்டிற்கான நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 4.92 சதவீதமாக உள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்துகள் கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1,536,731 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.1,742,777 கோடியாக உயர்ந்துள்ளது.
பெங்களூர்: இந்தியாவிலேயே இப்படியொரு வங்கி எங்கேயும் இல்லை..!

ஐசிஐசிஐ வாராக் கடன் அளவு
ஐசிஐசிஐ வங்கியின் வாராக் கடன் அளவு (GNPA) ஜூன் காலாண்டில் 3.41 சதவீதம் சரிந்துள்ளது, இது மார்ச் காலாண்டில் 3.60 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.15 சதவீதமாக இருந்தது.

வாராக் கடன்
ஜூன் காலாண்டில் வாராக் கடன் அளவு 382 கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. இது மார்ச் காலாண்டில் 489 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் மொத்த கிராஸ் NPA அளவு 5,825 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிகர வட்டி வரம்பு
ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வரம்பு மார்ச் காலாண்டில் 4 சதவீதமாகவும், முந்தைய ஆண்டின் காலாண்டில் 3.89 சதவீதமாகவும் இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் 4.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வட்டி அல்லாத வருமானம்
கருவூல வருமானத்தைத் தவிர்த்து, வட்டி அல்லாத வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 25 சதவீதம் அதிகரித்து, ரூ.3,706 கோடியிலிருந்து ரூ.4,629 கோடியாக உயர்ந்துள்ளது. கட்டண வருமானம் ரூ.3,219 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.4,243 கோடியாக உள்ளது.

கட்டண வருமானம்
சில்லறை, கிராமப்புற, வணிக வங்கி மற்றும் SME வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் மொத்தக் கட்டணத்தில் சுமார் 79 சதவிகிதம் என்று ஐசிஐசிஐ வங்கி தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ்
மேலும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் கடந்த ஆண்டு ரூ.186 கோடி நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் தற்போது ரூ.156 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஐசிஐசிஐ பிற பிரிவுகள்
ஐசிஐசிஐ லோமார்ட் ரூ.194 கோடியிலிருந்து 79.6 சதவீதம் உயர்ந்து ரூ.349 கோடியாக உயர்ந்துள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், முந்தைய ஆண்டின் ரூ. 311 கோடியில் இருந்து தற்போது ரூ.274 கோடியாகக் குறைந்துள்ளது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் லாபம், ஆண்டுக்கு ரூ.380 கோடிக்கு எதிராக ரூ.305 கோடியாகக் குறைந்துள்ளது.
சீனா மீது ஊசலாடும் கத்தி.. கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..!
ICICI Bank Q1: Profit rises 50 percent YoY to Rs 6,905 crore; NII jumps 21 percent
ICICI Bank Q1: Profit rises 50% YoY to Rs 6,905 crore; NII jumps 21%ஐசிஐசிஐ வங்கி அசத்தல்: 50% லாப உயர்வு, வட்டி வருமானம் 21% உயர்வு..!