பனாஜி: கோவா மாநிலத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மகள் நடத்தி வரும் சட்ட விரோதமாக பார் நடத்தி வருகிறார். எனவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதி இரானியை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது. இதனை இரானி மறுத்துள்ளார்.
கோவா மாநிலம் அசாகாவோ என்ற பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் குடும்பத்தினர் சில்லி சோல்ஸ் கபே என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகின்றனர். இதனை ஸ்மிரிதி இரானியின் மகளான ஜோயிஸ் இரானி நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
கோவா மாநிலத்ததின் கலால் விதிகளின்படி, ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெற முடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமமே பெறவில்லை என கூறப்படுகிறது.சில்லி சோல்ஸ் கபே என்ற உணவகம் அந்தோணி டிகாமா என்பவரின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு (2021) மரணம் அடைந்து விட்டதாக மாநில இறப்பு சான்றிதழில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மாநில கலால் துறை மற்றும் உள்ளூர் பஞ்., அதிகாரிகளுடன் இணைந்து முறைகேடாக நடத்தி வரும் உணவகம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டறிந்த வக்கீல் ரோட்ரிக்ஸ் என்பவர் புகார் அளித்துள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை வரும் 29 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது
முன்னதாக ஜோயிஷ் இரானி கூறுகையில் கோவா மாநிலம் உலகளவில் பெரியஅளவிலான சுற்றுலா மையமாக இருந்த போதிலும் சர்வதேச தரத்திலான உணவில் பின்தங்கி உள்ளது. தங்களுடைய சில்லிசோல்ஸ் கோவா வின் சிறந்த உணவு மையமாக இடம் பெறும் என கூறி இருந்தார்.
![]() |
இந்நிலையில் தனது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் என் மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். மதுக்கடை நடத்தவில்லை. ஆவணங்களைசரிபார்க்கவும். அதில் என் மகளின் பெயர் எங்கே? என கேட்டுள்ளார்.மேலும் தான் காங்கிரஸ் எம்.பி., ராகுலை எதிர்த்து வெற்றி பெற்றதன் காரணமாகவும், நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் சோனியா ,ராகுல் குறித்து பேசியதற்காகவும் பழிவாங்குகின்றனர் என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement