
தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மாளை நேரில் வாழ்த்திய அண்ணாமலை
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் ஜோஷியும் என்ற படத்திற்காக பின்னணி பாடிய 70 வயது நஞ்சம்மாளுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நஞ்சம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நஞ்சம்மாள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர். காந்த குரலுக்கு சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணி பாடகருக்கானது தேசிய விருது வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சி. ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.