சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், கட்சியின் விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரேன் உள்பட 15 பேரை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் ஒழுக்கமுறை குலையும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,
1. கு.ப.கிருஷ்ணன்
2. சி.ராஜேந்திரன்
3. கே.எஸ்.சீனிவாசன்
4. ஆர்.ராஜலட்சுமி
5. எஸ்.எம்.கே.முகம்மதுஅலி ஜின்னா
6. எம். பாரதியார்
7. பி.எஸ்.சிவா
8. ஆம்னி பஸ் அண்ணாதுரை
9. ராஜ்மோகன்
10. சி. ராமசந்திரன்
11. மணவை.ஜே. தரன் ராவ்
12. டி.சுஜைனி
13. ஆர். விஜய் பாரத்
14. மோகனப்பிரியா
15. ஜி.மோகன்
ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.