வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல் : பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் ஆப்கனில் இருந்து வெளிநாடு சென்ற ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாயகம் திரும்பும்படி, தலிபான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தலிபான்கள், கடந்த ஆண்டு ஆப்கனை கைப்பற்றியதை அடுத்து ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். ஆப்கனில் குருத்வாராக்கள் மீது அடிக்கடி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவும், உயிருக்கு அஞ்சிய சீக்கியர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் தலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காபூலில், கர்தே பர்வன் குருத்வாராவை, ஐ.எஸ்., அமைப்பின் தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததற்காக, ஹிந்து மற்றும் சீக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சர் முல்லா அப்துல் வாசியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, பாதுகாப்பின்மையால் ஆப்கனில் இருந்து வெளியேறிய ஹிந்து மற்றும் சீக்கியர்கள், தற்போது அப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் மீண்டும் ஆப்கன் திரும்ப வேண்டும் என, முல்லா அப்துல் வாசி கேட்டுக் கொண்டார்.
அத்துடன், பயங்கரவாதிகளின் தாக்குதலால் சேதமடைந்த கர்தே பவன் குருத்வாராவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக தொழில்நுட்பக் குழுவை அமைத்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement