நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.
தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் 3 படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.
இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் 3-வது சிங்கிளான லைஃப் ஆஃப் பழம் என்று பெயரிடப்பட்டு, ‘கண்ணால கதை பேச நீயும்…’ எனத் துவங்கும் பாடல் இன்று ஸ்பாட்டிஃபை, விங்க் மியூசிக் போன்ற தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
#LifeofPazham song out now!
https://t.co/4D6PTywLwf@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/QfVSwH4q8s
— Sun Pictures (@sunpictures) July 27, 2022
இதேபோல், பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. நாளை படத்தின் டீசர் வெளியாகிறது.
#Vaathi #Sir pic.twitter.com/2NAo1ayEv2
— Dhanush (@dhanushkraja) July 27, 2022
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள மற்றொருப் படமான ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நாளை பிறந்தநாள் காணும் திரு @dhanushkraja மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க #NaaneVaruven திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth #HBDDhanush pic.twitter.com/DImpOtZE18
— Kalaippuli S Thanu (@theVcreations) July 27, 2022
மேலும், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷ் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை கிளிம்ப்ஸ் காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
We also want to give flowers to our sexy Tamil friend
Here’s a glimpse of @dhanushkraja behind the scenes of The Gray Man pic.twitter.com/ie9SGFe5bb— Netflix India (@NetflixIndia) July 27, 2022