44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஓலிபியாட் போட்டிகள் நடைபெறுவது முதல் முறையாகும்.
கோலகமாக தொடங்கியுள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக தமிழக அரசு பல கோடிகளை செலவு செய்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இது வெளி நாடுகளில் இருந்து வந்திருக்கும் வீரர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனக் கலைகள் மூலம் வீரர்களை கவர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது.
அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு.. மக்கள் மத்தியில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்தலாம்?

டிக்கெட்கள் ஃபுல்
இது குறித்து தமிழ் நாடு மாநில செஸ் சங்கத்தின் அதிகாரிகள் தரப்பில், பிரீமியம் விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் கூட, டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பிவிட்டன. இந்த டிக்கெட் விலை பலரையும் பின்னுக்கு தள்ளியிருந்தாலும், டிக்கெட்டுகள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியர்களூக்கு எவ்வளவு கட்டணம்
அகில இந்திய சதுரங்க சம்மேளனத்தின் (AICF) டிக்கெட் தளத்தின் படி, பொது பிரிவினருக்கு ஹால் 1க்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் கட்டணமாகவும், இதே ஹால் 1க்கு 3000 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெளி நாட்டினருக்கு எவ்வளவு கட்டணம்
இந்த செஸ் ஓலிபியாட் போட்டியினை கண்டுகளிக்க வெளி நாட்டினருக்கு 1 நாள் முழுவதும், ஹால் 2க்கு 6000 ரூபயாகவும், ஹால் 1க்கு 9000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சலுகை யாருக்கு?
இந்த சதுரங்க போட்டிகளை கண்டுகளிக்க 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் விலை ஹால் 1க்கு 300 ரூபாயும், ஹால் 2க்கு 200 ரூபாயாக உள்ளது.

இரு பிரிவாக போட்டி
இவ்விழாவானது இரண்டு அரங்குகளில் நடைபெறுகிறது. ஹால் 1 உயர்தர அணிகளை உள்ளடக்கியது. இதில் 28 போர்டுகள் திறந்த நிலையிலும், பெண்கள் பிரிவில் 21ம் உள்ளன). ஹால் 1ல் மீதமுள்ள போர்டுகளும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்புக்கும் ஏற்றதா?
தமிழகத்தில் நடந்து வரும் இந்த போட்டியானது சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு விழாவாக மாறியுள்ளது. அந்தளவுக்கு விழாக்கோலம் பூண்டுள்ளது சென்னை மாமல்லபுரம். எனினும் இந்த கட்டண விகிதங்கள் என்பது அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இல்லை எனலாம்.
Do you know how much ticket cost to watch and enjoy chess olympiad 2022 matches?
Do you know how much ticket cost to watch and enjoy chess olympiad 2022 matches?/செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை பார்த்து ரசிக்க எவ்வளவு டிக்கெட் கட்டணம் தெரியுமா?