16.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்களுடன், உண்டியல் முறையின் ஊடாக நாணயங்களை பரிமாற்றும் ஒருவர் வெலிகம பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்மாதுவ உப முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கல்பொக்க பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.