ரூ.2.5 லட்சம் வருமானம் இருந்தாலும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் விறுவிறுப்பாக தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ள நிலையில் இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வருமானம்

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்றாலும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட எதிர்கால நலன் கருதி வருமான வரி தாக்கல் செய்வதில் தவறில்லை என்று கூறப்பட்டு வருகிறது.

 டிடிஎஸ் தொகை

டிடிஎஸ் தொகை

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் வருமான வரியை தாக்கல் செய்தால் அதன் மூலம் சில நன்மைகளைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்தால்தான் டிடிஎஸ் தொகையை பெற முடியும் என்றால் கண்டிப்பாக ரூ.2.5 லட்சம் வருமானம் பெற்றவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி
 

வருமான வரி

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வருமான உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்தாலும் அவர்கள் வருமான வரி கட்ட தேவையில்லை என்றும் வருமான வரி தாக்கல் செய்வதால் சில பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் வருமான வரித்துறையினர் என தெரிவித்துள்ளனர். டிடிஎஸ் பிடிப்பவர்கள் அந்த தொகையை திரும்ப பெறுவதற்கு கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அது மட்டுமின்றி ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதால் சில நேர்மறையான பலன்களை பெறுவார்கள் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வருமானத்திற்கான ஆதாரம்

வருமானத்திற்கான ஆதாரம்

வருமான வரி தாக்கல் செய்வது என்பது வருமான வரி செலுத்துவது மட்டுமன்றி அது நமது வருமானத்திற்கான ஆதாரமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆதாரத்தின் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் போது விசா, பாஸ்போர்ட் பெறுவது எளிதாக இருக்கும் என்றும் அதேபோல் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வங்கிக்கடன் சுலபமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆலோசகர் ஆர்த்தி ராடே

நிதி ஆலோசகர் ஆர்த்தி ராடே

இதுகுறித்து நிதி ஆலோசகர் ஆர்த்தி ராடே அவர்கள் கூறியபோது, ‘உங்கள் வருமானம் வருமான வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தாலும் நீங்கள் கணக்கு தாக்கல் செய்வதுதான் நல்லது என்றும், ஏனெனில் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும் நடைமுறையில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்யும்” என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITR filing must for these people even if income below exemption limit

ITR filing must for these people even if income below exemption limit | ரூ.2.5 லட்சம் வருமானம் இருந்தாலும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.