வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதுாறு பதிவுகளை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 24 மணி நேரத்திற்குள் நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நேட்டா டிசோஸா ஆகியோர் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.
அப்போது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோயிஷ் இரானி, 18, கோவாவில் அனுமதியின்றி மதுபான கூடம் நடத்துவதாக குற்றஞ்சாட்டினர்.’ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.தன் மீது பொய் புகார் பரப்பிய காங்., தலைவர்கள் மீது, 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைச்சர் ஸ்மிருதி அவதுாறு, ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.
![]() |
இதற்கு காங்., தலைவர்கள் பதில் அளிக்காததை தொடர்ந்து, அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூவர் தெரிவித்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது’ என ஸ்மிருதி தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து,
‘சமூகவலைதளங்களில் காங்., தலைவர்கள் பதிவிட்டு உள்ள அவதுாறு கருத்துக் கள், புகைப்படங்கள், ‘வீடியோ’ உள்ளிட்டவைகளை, 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். ‘தவறினால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அவற்றை நீக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement