தேனி: மதுப்பழக்கத்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

தேனி மாவட்டத்தில் மது பழக்கத்தால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் அணைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் முருகன்(31). இவரது மனைவி காளியம்மாள்.

இந்நிலையில் முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில் முருகன், சம்பவத்தன்று வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உயிருடன் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து முருகனின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.