சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம்  

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனம் அல்லாத பிற எரிபொருள் தேவைகளுக்கான QR. குறியீடுகளை வழங்க பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வியாபாரப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனப் பதிவு, அரசாங்க வாகனப் பதிவின் சார்பாக அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய வசதி செய்தல், பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் எரிபொருள் இருப்புக்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வசதிகளை உருவாக்குதல், தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வசதி மற்றும் சட்ட விரோதமாக QR குறியீடுகளை அமைத்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான ஒன்லைன் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.