அவசர திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்ஷத்திரா

சின்னத்திரை நடிகையான நக்ஷத்திராவுக்குவும், ஜீ தமிழ் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் விஷ்வாவுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்கள் மத்தியில் டாப் செலிபிரேட்டியாக வலம் வரும் நக்ஷத்திராவின் நிச்சயதார்த்தமும் சரி திருமணமும் சரி எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், சக நடிகர் நடிகைகள் கூட கலந்து கொள்ளாத நிலையில் யாருக்கும் தெரியாமல் மிக அவசரமாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, நடிகை ஸ்ரீநிதி, நக்ஷத்திராவின் காதலர் பற்றி பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்ததால் இந்த அவசர திருமணத்திற்கான காரணம் என்ன? என்று ரசிகர்களே நக்ஷத்திராவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நக்ஷத்திரா வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'என் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, தான் எங்கள் திருமணம் ஒரேநாளில் முடிவு செய்யப்பட்டு அவசரமாக நடந்து முடிந்தது. எனக்கு பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை. நெருங்கிய நண்பர்களை கூட கூப்பிட முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.