காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், நகர சபை தவிசாளர் எஸ் எச்.எம். அஸ்பர், தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல். ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்தனர்.