monkeypox: புதிய அறிகுறிகள் இவைதானாம் மக்களே… பாத்து உஷாரா இருங்க!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த உலகம், தற்போது குரங்கு அம்மை வைரசின் வசம் மாட்டிக் கொண்டுள்ளது. இந்த தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனமே அறிவி்க்கும் அளவுக்கு நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமாகி வருகிறது.

கடந்த மே மாதத்தில் உலக அளவில் தீவிரமடைய தொடங்கிய குரங்கு அம்மையின் தாக்கம் நைஜீரியா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டிருந்தனர். ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை தலைக்காட்டி வருகிறது. உலக அளவில் இதுவரை 80 -க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகி உள்ள நிலையில், இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?

நம் நாடடிலும் இதுவரை 10 க்கும் மேற்பட்டவர் குரங்கு அம்மை தொற்று்கு ஆளாகி உள்ளனர். அதிலும் தலைநகர் டெல்லி மற்றும் கேரள மாநிலத்தில்தான் குரங்கு அம்மை அதிகம் ஆட்டம் காட்டி வருகிறது. திருச்சூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மரணடைந்த சம்பவம் இந்த நோய் குறித்த பீதியை நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த பீதி ஒருபுறம் இருக்க, குரங்கு அம்மைக்கான புதிய அறிகுறிகள் குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் மறுபுறம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

கடுமையான தலைவலி, காய்ச்சல், குளிர், சரும வெடிப்புகள், கொப்புளங்கள், பருக்கள், சோர்வு, , தசை வலி, முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றுடன் மலக்குடல் வலி மற்றும் ஆணுறுப்பு வீக்கம் (எடிமா) போன்றவையும் குரங்கு அம்மையின் அறிகுறிகளாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த அறிகுறிகள் இல்லாத நிலையில், குரங்கு அம்மையின் புதிய மாறுபாடு குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் தெர்னல் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் இப்புதிய அறிகுறிகள் இடம்பெற்றுள்ளன.

குரங்கு அம்மை தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களை குரங்கு அம்மை தொற்றுக்கான பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும். பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டாலோ, தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலோ அவர்களை உடனே மூன்று வாரங்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், இத்தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை எளிதில் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் குரங்கு அம்மைக்கு ஆளானவர்கள் பயன்படுத்திய உடைகள், உடைமைகளை பராமரிப்பாளர்கள் கையாளும்போதும், நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை மற்ற குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மரு்த்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெரியம்மை மற்றும் குரங்கு அம்மையை உண்டாக்கும் வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை என்பதால், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களை குணப்படுத்த பெரியம்மைக்கான வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.