வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ் : ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன்னைப் போலவே உருவ அமைப்பு கொண்ட நபரை வெளி உலகிற்கு பயன்படுத்துகிறார்’ என, உக்ரைன் நாட்டு உளவுத் துறை தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 24ல் போர் தொடுத்தது. இன்று வரை போர் தொடர்கிறது.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 69, உடல்நிலை குறித்து சந்தேகத்துக்குரிய தகவல்களும் கசிந்து வருகின்றன. புடினுக்கு ரத்தப் புற்று நோய் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. அவர் ‘பார்க்கின்சன்’ எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
![]() |
இந்நிலையில், உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ், ‘டிவி’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:புடின் தன்னைப் போலவே தோற்றம் உள்ள நபரை பயன்படுத்தி, தான் நன்றாக இருப்பதாக வெளியுலகுக்கு காட்டிக் கொள்கிறார். சமீபத்தில் வெளியான ‘வீடியோ’வில் அவரது உயரம் மற்றும் காதுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன.
அவரது நடை, பாவனைகளை கூர்ந்து கவனித்தால், அவர் புடின் போலவே தோற்றம் கொண்ட இன்னொருவர் என்பது தெரியும். சமீபத்தில், டெஹ்ரானுக்கு சென்றிருந்த புடின் விமானத்தில் இருந்து இறங்கி நடக்கையில் வழக்கத்துக்கு மாறாக வேகமாக சென்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement