சிவமணிக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின்: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா காட்சிகள்

MK Stalin plays drums in Chess Olympiad function: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் சிவமணியுடன் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்ரம்ஸ் வாசித்த்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: 23-ம் தேதி ஸ்டாலின் பராக்… கோவையில் மாற்றுக் கட்சியினரை இழுக்கும் செந்தில் பாலாஜி!

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் அகர்டி துவார்கோவிச், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் நடுவர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்துக் கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற உடையில், ஆளப்போறான் தமிழன் பாடல் பின்னனியில் மாஸாக மேடை ஏறினார்.

பின்னர் நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

நிறைவு விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. இந்த விழாவில் சில மணித்துளிகளில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர்.

பின்னர், இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசி ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் இசைத்து அசத்தினர்.

அதன்பின், டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த இடத்திற்கு அருகே சென்றார் டிரம்ஸ் சிவமணி. அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார். அப்போது ட்ரம்ஸ் சிவமணிக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஸ்டாலின் விடாமல் ட்ரம்ஸ் வாசித்தது, அங்கிருந்த விருந்தினர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.