தமிழக சிறுவனின் தரமான செயல்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சமூக கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யும் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் திறமை உள்ளவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு புகழ் பெற்று கொடுப்பதிலும் சிறந்து விளங்குகிறார்.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எவ்வாறு செயல்படனும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவ பாருங்க!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறன் குறித்து ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். இந்தியாவில் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை அடுத்த படத்திற்கு கட்டத்திற்கு செல்ல வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இந்திய ஹாக்கி அணி

இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி அணி பாலிவுட் திரைப்பட பாடலுக்கு டான்ஸ் ஆடும் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வந்தது. இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர் மைதானத்தில் சிறப்பாக டான்ஸ் ஆடியதை அடுத்து அவர்கள் இங்கும் டான்ஸ் ஆடியதில் ஆச்சரியம் இல்லை என்றும், அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆட வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

 

தமிழக சிறுவன்

இதனையடுத்து அவர் ஒரு சிறுவன் தனது அக்ரோபாட்டிக் திறமையை காட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த பையனைப் பார்த்த நண்பர் ஒருவர் இந்த வீடியோவை தனக்கு பகிர்ந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற திறமையான இளைய தலைமுறையை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் இந்தியாவுக்கு அதிக தங்கம் கிடைப்பது உறுதி என்று அடுத்த தலைமுறை திறமைசாலிகளை நாம் கண்டுபிடித்து பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

காமன்வெல்த் பதக்கங்கள்

காமன்வெல்த் பதக்கங்கள்

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் போட்டியில் இதுதான் 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சா வாழ்த்து

சானியா மிர்சா வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நமக்கு நம்பமுடியாத அளவு பதக்கங்கள் கிடைத்து உள்ளது என்றும் பதக்கம் வென்ற அனைவருக்கும் மற்றும் அணியினருக்கும் வாழ்த்துக்கள் என்றும் சானியா மிர்சா ட்விட் செய்துள்ளார்.

அதிக பதக்கங்கள்

அதிக பதக்கங்கள்

இந்தமுறை 61 பதக்கங்களை இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பெற்றுள்ளதை அடுத்து இன்னும் திறமைசாலிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான பயிற்சி அளித்தால் அடுத்த காமன்வெல்த் போட்டியில் இன்னும் அதிக பதக்கங்களை வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anand Mahindra has found next gold medalist for India in a Tamil Nadu village

Anand Mahindra has found next gold medalist for India in a Tamil Nadu village | தமிழக சிறுவனின் தரமான செயல்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.