தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது பள்ளி வேன் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கட்டிட மேஸ்திரி லட்சுமணன் (26).
இவர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சிகரஅள்ளி அருகே சென்ற போது ஒரு வளைவில் திடீரென வந்த பள்ளி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.