பாகல்கோட் : சுதந்திர தின கொண்டாட்டம் நடந்த போது, சிறைக் கழிப்பறையில் விசாரணைக் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்கோட் அருகே உள்ள லோகாபுராவை சேர்ந்தவர் மஞ்சுநாத் குரி, 35. இவர் கடந்த மார்ச் மாதம் சிறுமியை பலாத்காரம் செய்ததாக, லோகாபுரா போலீசார் கைது செய்தனர். ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.பாகல்கோட் சிறையில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது மஞ்சுநாத், சிறுநீர் கழித்து வருகிறேன் என கூறி கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சிறை ஊழியர்கள் சென்று பார்த்தனர்.அப்போது, அவர் கழிப்பறை ஜன்னலில் துண்டால் துாக்கிட்ட நிலையில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.’தற்கொலைக்கு அதிகாரிகளே காரணம். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என கைதியின் பெற்றோர் கூறி உள்ளனர்.
பாகல்கோட் : சுதந்திர தின கொண்டாட்டம் நடந்த போது, சிறைக் கழிப்பறையில் விசாரணைக் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்கோட் அருகே உள்ள லோகாபுராவை சேர்ந்தவர் மஞ்சுநாத் குரி, 35.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்