பாகிஸ்தானின் பிரபல பாடகி நய்யாரா நூர் காலமானார்| Dinamalar

கராச்சி : பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி நய்யாரா நுார், 71, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரபலமான பின்னணி பாடகியாக விளங்கியவர் நய்யாரா நுார். இவர், நம் நாட்டின் அசாம் மாநிலத்தில் பிறந்தவர்.இவரது தந்தை, பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா மீது மிகுந்த பற்று உடையவர். கடந்த, 1958ல், இவரது குடும்பம் பாகிஸ்தானின் கராச்சிக்கு குடியேறியது.பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ள நுார், கஜல் பாடல்கள் பாடுவதிலும் பிரபலமாக விளங்கினார்.

‘பாகிஸ்தானின் நைட்டிங்கேர்ள்’ என, புகழப்பட்டவர்.இசை பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து, இசையுலகில் கொடிகட்டி பறந்த நுார், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கராச்சியில் நேற்று அவர் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அவரது மறைவுக்கு பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.