மனைவியை அம்போன்னு விட்டுட்டு தாடி நடிகர் செய்த கேடி வேலை.. கடுப்பானவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா?

ஹைதராபாத்: சமீபத்தில் கெத்தாக நீண்ட தாடியை தடவிக் கொண்டே வெளிநாட்டுக்கு மனைவியுடன் சென்ற நடிகர் அங்கே செய்த சில விஷயங்கள் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

நீண்ட தாடியுடன் அந்த வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பக்கத்து மாநிலத்து நடிகர்.

செல்லும் இடமெல்லாம் அவர் பின்னால் பெண்கள் கூட்டம் குவிய நடிகருடன் தேவையில்லாமல் வந்து சிக்கிக் கொண்டோமே என மனைவி ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார்.

தொட்டதெல்லாம் ஹிட்

அந்த நடிகர் பாவமா நடிச்சாலும், கோவமா நடிச்சாலும் அவருக்கே உரித்தான தனி ஸ்டைல் மற்றும் தேர்வு செய்யும் கதை காரணமாக அவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வருகிறது. அடுத்த அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வரும் அந்த நடிகர் கடைசியாக வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சமீபத்தில் தொடங்கி விட்டார்.

வெளிநாட்டில் மரியாதை

வெளிநாட்டில் மரியாதை

நடிகரின் புகழ் நம் நாட்டை தாண்டி உலகம் முழுவதும் பரவி விட்டது. வெளிநாட்டில் அவரை அழைத்து மரியாதை செலுத்தி அவர் படத்தின் சிக்னேச்சர்களையே வெளிநாட்டினரும் காட்டி நடிகரை ஒரே கொண்டாட்ட மோடுக்கு மாற்றி விட்டனர். ஆண்களை விட பெண்கள் கூட்டம் அந்த நடிகரை பார்த்ததுமே பித்துப் பிடித்தது போல மாறிவிட்டது.

அம்போன்னு விட்டுட்டு

அம்போன்னு விட்டுட்டு

அழகான பெண்கள் அப்படியே அவரை கவர் செய்ய, மனைவியை கண்டுக்காமல் அம்போன்னு விட்டுட்டு அவர்கள் பக்கம் நடிகர் அட்டெண்டன்ஸ் போட்டது, கூட இருந்த மனைவிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். சினிமாவில் ஏகப்பட்ட ஹீரோயின்களை இடுப்பில் தூக்கி வைத்து ஆடினாலும், வராத கோபம் அருகே பார்த்ததும் அம்மணிக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது.

செம டோஸ்

செம டோஸ்

அந்த இடத்தில் மனைவியை ஒட்டுமொத்தமாக அவாய்ட் பண்ணிவிட்டு தனது ரசிகைகளுடன் கூத்தடித்த நடிகருக்கு, வீட்டுக்கு வந்ததும் சரியான டோஸ் விட்டு இருக்காராம் அவரது மனைவி. உங்களுக்கு பெண் ரசிகைகள் தான் முக்கியம் என்றால், என்னை ஏன் கூட்டிட்டுப் போய் இப்படி அசிங்கப்படுத்தனும் என நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டுள்ளாராம். விஷயத்தின் சீரியஸ்னஸ் புரிந்து கொண்ட அந்த தாடி வாலா மனைவியிடம் சாரி கேட்டு சரண்டர் ஆகி விட்டாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.