பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகித உயர்த்தி வருகிறது. இதற்கிடையில் சீனா பொருளாதாரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று வட்டியைக் குறைத்து உள்ளது.
இதன் மூலம் உலகப் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற அச்சம் அதிகமாகி சர்வதேச முதலீட்டாளர்கள் அபாயகரமான அல்லது சரிவு ஏற்படும் என அதிகளவில் நம்பும் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வருகிறது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, யூரோ நாணயத்தை 1 டாலருக்கும் கீழ் தள்ளியுள்ளது.
ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.80 கீழ் சரிவு.. ஆனால் யூரோ பிற நாணயங்களுக்கு எதிராக ஏற்றம்!

யூரோ மதிப்பு
பொதுவாகச் சர்வதேச நாணய சந்தையில் யூரோ-வின் மதிப்பு அமெரிக்க டாலரை காட்டிலும் அதிகமாக இருக்கும், ஆனால் பிரிட்டன் பிரிவு, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தின் தொடர் வீழ்ச்சி ஆகியவை பெரிய அளவிலான மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர்
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின்பு ரஷ்யா-வை நம்பியிருந்த ஜெர்மனி உட்படப் பல நாடுகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் பாதிப்பு வந்த நிலையில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

20 வருட கால உச்சம்
அமெரிக்க டாலர் மதிப்பு 0.8% உயர்ந்து ஐந்து வார உயர்வான 109.02 அளவை எட்டியுள்ளது மட்டும் அல்லாமல், டாலர் மத்திப்பு ஜூலை மாத மத்தியில் தொட்ட 20 வருட கால உச்ச அளவான 109.29 இலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

ஜாக்சன் ஹோல் வயோமிங் கூட்டம்
இந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியின் ஜாக்சன் ஹோல், வயோமிங் சிம்போசியத்தில் பல பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் கடுமையான பணவியல் இறுக்கமான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதால், சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் டாலர் மதிப்பில் எதிரொலித்துள்ளது.

டாலர் யூரோ
முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ-வின் மதிப்பு ஜூலை 14ஆம் தேதி 1 டாலருக்குக் கீழ் சரிந்தது. அதாவது 1 யூரோவுக்கு எப்போதும் 1.2 முதல் 1.5 அமெரிக்க டாலர் மதிப்பிடப்படும், ஆனால் ஜூலை மாதம் யூரோ மதிப்பு 0.99345 ஆகச் சரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 2வது முறையாக 0.9950 ரூபாயாகச் சரிந்துள்ளது.
USA Dollar – Euro falls parity level for the second time this year
USA Dollar – Euro falls parity level for the second time this year | யூரோ நாணயத்திற்கே இந்த நிலையா..? ஐரோப்பா-வின் மோசமான காலகட்டம்..!