திமுக வில் அடுத்தடுத்து இணையும் கொங்கு மண்டல முக்கிய புள்ளிகள் … சரிகிறதா அதிமுக கோட்டை..?

நான்கு நாள் பயணமாக

கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். இந்த கூட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி வினோவை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்த முன்னாள் தேமுதிக எம்எல்ஏ தினகரனுக்கு நன்றி. உங்களின் வரவு திமுகவிற்கு பலம் சேர்க்கும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 39லும் வெற்றிபெறுவோம். இங்கு உள்ள 55 ஆயிரம் பேரும் தலைக்கு தலா 10 வாக்குகளை நம் பக்கம் கொண்டு வர வேண்டும். இதை டார்கெட்டாக வைத்து செயல்பட வேண்டும்’ என்று பேசினார்.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ஆறுகுட்டி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். இவர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.

மேலும் அவரைத் தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தினகரனும் திமுகவில் இணைந்தார்.அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி ஆகியோரும் சேர்ந்து உள்ளனர்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று கொங்கு மண்டலத்திலிருந்து சில முக்கியப்புள்ளிகள் திமுகவில் இணைந்திருப்பது எதிர்கட்சிகளை சற்று அசைத்துப்பார்த்துள்ளது. அதிமுக உட்பட பாஜகவும் திமுகவின் இந்த நகர்வை உற்று நோக்குகிறது.

இதை எதிர் கொள்ள எதிர்கட்சிகளின் எதிர்வினைகளை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.