பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை இறைத்து வரும் போலீசார்.!

மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை போலீசார் இறைத்து வருகின்றனர்.

குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தபிரகாஷ் என்ற ரவுடிக்கும், கருத்து என்ற ரவுடிக்கும் மாமூல் வாங்குவதில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மறைமலை நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் சென்றபோது கருத்துவும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பிரகாஷை தூக்கி சென்று மண்ணிவாக்கம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி கோணிப்பையில் மூட்டை கட்டி இந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பத்து மாதங்களுக்கு பிறகு, கிணற்றில் உள்ள பிரகாஷின் உடலை மீட்க, கழிவு நீர் வாகனம் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.