சென்னை:
திரைக்குப்
பின்னால்
பல
சுவாரசியமான
சம்பவங்கள்
சினிமா
துறையில்
நடப்பது
வாடிக்கை.
சில
சமயம்
நகைச்சுவையான
சம்பவங்களும்
சில
சமயம்
ஈகோ
சண்டைகளும்
நடப்பதை
நாம்
அவ்வப்போது
கேள்விபட்டிருக்கிறோம்.
அந்த
வகையில்
யுவன்
சங்கர்
ராஜா
இசை
அமைத்த
பாடல்
ஒன்றை
பிரேம்ஜி
மொக்கை
பாடல்
என்று
விமர்சித்துள்ளார்.
ஜுனியர்
சீனியர்
இயக்குநர்
ஜே.எல்.சுரேஷ்
இயக்கியிருந்த
திரைப்படம்
ஜூனியர்
சீனியர்.
மலையாள
நடிகர்
மம்முட்டி
மற்றும்
நடிகர்
ரவிச்சந்திரன்
மகன்
அம்சவர்தன்
நடித்திருந்தார்கள்.
இந்தப்
படம்
முழுக்க
முழுக்க
மலேசியாவில்
படம்
பிடிக்கப்பட்டது.
வேலை
திரைப்படத்தை
தொடர்ந்து
இரண்டாவது
முறையாக
இயக்குநர்
சுரேஷ்
இயக்கிய
படத்திற்கு
யுவன்
சங்கர்
ராஜா
இசையமைத்திருந்தார்.

அசிஸ்ட்டண்ட்
பிரேம்ஜி
பிரேம்ஜி
அமரனும்
யுவன்
சங்கர்
ராஜாவும்
சகோதரர்கள்
என்பதால்
வெளிநாட்டில்
படிப்பை
முடித்துவிட்டு
இந்தியா
திரும்பிய
பிரேம்ஜி
ஏற்கனவே
பிரபலமாக
இருந்த
யுவனிடம்
அசிஸ்டெண்டாக
பணி
புரிய
ஆரம்பித்தார்.
அவரது
இசையில்
அவ்வப்போது
பாடல்களை
பாடவும்
செய்வார்.
இப்படி
இருக்க
ஜூனியர்
சீனியர்
படத்திற்காக
ஒரு
பாடலை
கேட்டிருந்தாரம்
இயக்குனர்.
அதற்கு
தித்திப்பாய்
இருப்பா
தேன்
போல
சிரிப்பா
என்ற
பாடலை
கம்போஸ்
செய்து
யுவன்
சங்கர்
ராஜா
கொடுத்தாராம்.
டியூனை
கேட்ட
பிரேம்ஜி
மொக்க
பாட்ட
டைரக்டருக்கு
குடுக்குறியா
என்று
கலாய்த்தாராம்.
ஆனால்
அதன்
பின்னர்
பாடலைக்
கேட்ட
இயக்குநருக்கு
அந்தப்
பாடல்
பிடித்துப்
போகவே
அதனை
முடித்துக்
கொடுத்தார்களாம்.
இவ்வாறு
பிரேம்ஜி
ஒரு
பேட்டியில்
யுவன்
சங்கர்
ராஜாவை
கலாய்த்துள்ளார்.
இருப்பினும்
அந்தப்
பாடல்
வெளியான
போது
மக்கள்
மத்தியில்
சற்று
பிரபலமானது.

அறிமுகம்
செய்த
சிம்பு
அசிஸ்டெண்ட்டாக
இருந்தபோது
பி.ஜி.எம்
வாசிக்கச்
சொல்லி
யுவன்
சங்கர்
ராஜா
சில
காட்சிகளை
கொடுப்பாராம்.
அப்படி
மன்மதன்
படத்தின்
இசை
பணிகளின்
போது
சிம்பு
பிரேம்ஜியை
கவனித்துள்ளார்.
இவரது
நடவடிக்கைகளை
பார்த்த
சிம்பு
உன்னை
என்னுடைய
வல்லவன்
படத்தில்
நயன்தாராவுக்கு
நண்பனாக
நடிக்க
வைக்கிறேன்
என்று
பிரேம்ஜியை
நடிகனாக்கிவிட்டார்.
அதன்பின்னர்
தான்
தனது
அண்ணன்
வெங்கட்
பிரபு
இயக்கத்திலேயே
பிரேம்ஜி
நடித்தார்
என்பது
கூடுதல்
தகவல்.

இசை
பிரேம்ஜி
அமரனும்
தனது
நண்பர்கள்
நடிக்கும்
படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
என்னமோ
நடக்குது,
அச்சமின்றி,
ஆர்.கே.நகர்,
சாம்பி,
மன்மத
லீலை,
பார்ட்டி
போன்ற
படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
வெளிப்படையாக
நகைச்சுவையாக
பேசக்கூடிய
பிரேம்ஜி,
எப்பொழுதும்
தன்னுடைய
பெரியப்பா
இளையராஜாவின்
பாடல்களை
தான்
உல்டா
செய்து
கம்போஸ்
செய்வேன்
என்று
பலமுறை
பல
பேட்டிகளில்
கூறியுள்ளார்.