உத்தரகாண்ட் மாநில அரசுப் பணிகளில் அம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 2006ஆம் ஆண்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரகாண்ட் மாநில அரசுப் பணிகளில் அம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவு ஜூலை 24, 2006 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டு தற்போது வரை அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற உத்தரகாண்ட் மாநில குடிமைப் பணித் தேர்வின் முதற்கட்டத் தேர்வில் அம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை விட அதிகம் பெற்ற போதிலும் தங்களை முதன்மைத் தேர்வுக்கு அழைக்கவில்லை என்று கூறி 12 வெளிமாநில தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஆர்.சி.குல்பே ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகே ஹரி குப்தா, 2006ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இடஒதுக்கீடு குறித்த மாநில அரசின் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 16, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது என்று வாதிட்டார். பாதிக்கப்பட்ட பெண் தேர்வர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்காதது அவர்களுக்கு எதிரான பாரபட்சமான செயல் என்று அவர் வாதிட்டார்.
![Rise in COVID-19 cases] Uttarakhand High Court, subordinate courts to remain closed for a week](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/Uttarakhand-HC-3.jpg)
குடியுரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் மூலம் மட்டுமே குடியுரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றும் அவர் தனது வாதங்களை முன்வைத்தார், இதையடுத்து மாநில அரசுப் பணிகளில் உத்தரகாண்ட்டில் வசிக்கும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM