திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் தங்களது பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் குழாய்களின் சுற்றளவை அதிகரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி பேசிய போது: மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் அமாவாசை விரதம் முடிக்க வேண்டும் சொல்லி கூச்சலிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மாமன்ற கூட்டத்தினை புறக்கணித்து வேகமாக கூட்டரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் மாநகராட்சி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. ஆனால் விஜய் கடைசியாக தேவையில்லாதவற்றை பேசி அதிக நேரத்தை செலவிடுவதாக திமுக மாமன்ற உறுப்பினர் குறிப்பிட்டனர். எப்படி இருந்தாலும் திமுக மாமன்ற உறுப்பினர்களே தனது கட்சி மாமன்ற உறுப்பினரை பேச விடாமல் செய்தது திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கவுன்சிலர் வி சி கே பிரபாகரன் பேசுகையில் எங்கள் வார்டுக்கு உட்பட்ட ஈ.பி. ரோடு பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பிரசவத்துக்கு செல்லும் தாய்மார்களை போதிய மருத்துவ வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆகவே போதிய டாக்டர்களை நியமித்து அங்கேயே பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நகர்நல அலுவலர்;-
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜவகர் காங்கிரஸ்;-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் பாத்ரூம் வசதி இல்லை. வெளியில் இருக்கும் கழிவறைகள் சுத்தமாக இல்லை. ஆகவே கோவிலுக்கு வெளியே பக்தர்களுக்கு வசதியாக கூடுதல் கழிவறை மற்றும் பாத்ரூம் வசதிகள் செய்திட வேண்டும்.

மேயர் அன்பழகன்
உடனடியாக பக்தர்களுக்கு வசதியாக புதிய பாத்ரூம்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
லீலா வேலு திமுக;-
திருச்சி மாநகராட்சியில் மண்டல வாரியாக 11 ஸ்ட்ரைகிங் போர்ஸ் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எனது வாடில் எட்டு பேர் மட்டுமே வேலைக்கு வந்தார்கள். ஆனால் 11 பேர் கையெழுத்துட்டு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி என்றால் அந்த மூன்று பேர் எங்கே சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் அன்பழகன்;-
எல்லோரும் மனிதர்கள் தான். உடல் நலக்குறைவால் கூட பணிக்கு வராமல் இருந்திருக்கலாம். இனிமேல் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு நாள் மாஸ் கிளீனிங் செய்வதற்கு தற்போதைய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் நபர்களுடன் திட்டமிட இருக்கின்றோம் என்றார்.
மேற்கண்ட விவாதம் நடந்தபோது அதிகாரிகள் தரப்பில் ஒருவர் மேற்கண்ட மண்டலத்தில் ஸ்ட்ரைக் கிங் போர்சில் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னொருவர் 11 பேர் நியமிக்கப்பட்டு அதில் ஒன்பது பேர் பணிக்கு வந்ததாகவும் மாறுபட்ட கருத்தினை பதிவு செய்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
செந்தில் பஞ்சநாதன் ;-
மாநகராட்சி ஆணையாளர் அதிகாலை 5 அரை மணிக்கு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்த தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பணிகள் காலை 9 மணி 10 மணி வரை நீடிக்கிறது. அதன் பின்னர் வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க செல்கிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் மக்கள் வேலைக்கு சென்று விடுகிறார்கள். பின்னர் மாலையில் மீண்டும் அதே குப்பை சாலைக்கு வந்துவிடுகிறது. ஆகவே முதலில் வீடுகளில் இருக்கும் குப்பையை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துச்செல்வம் (தி.மு.க.)
மாநகராட்சியில் சர்வேயர் இல்லாத காரணத்தால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. அதேபோன்று மழைக்காலத்துக்கு முன்பாக வடிகால்களை தூர்வார டெண்டர் விடப்பட்டது.3 வார்டுகளுக்கு சேர்த்து ரூ. 11 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் எங்கள் பகுதியில் ஒப்பந்ததாரர் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி. அதன் பின் வந்து பார்க்கவே இல்லை.
முத்துக்குமார்(தி.மு.க): பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
மேயர் அன்பழகன்
உங்கள் பகுதியில் நான் கூட வந்து பார்த்தேன். தவறான தகவல் சொல்லக்கூடாது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என ஆவேசமடைந்தார்.
இதை எடுத்து திமுக கவுன்சில முத்து செல்வம் எழுந்து,
இங்கு திமுக ஆட்சி நடக்கிறதா அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. பணிகளில் வெளிப்படை தன்மை வேண்டும். எங்கள் வாடில் நடக்கும் பணிகள் எங்களுக்கே தெரியவில்லை. அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கவுன்சிலர் ஜவகர் திமுக கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் பேசும்போது, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையை உடனே திறக்க வேண்டும்.
மேயர் அன்பழகன்
கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்றார்.
அதற்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் பார்த்த போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பைல்ஸ் அகமது
தென்னூர் மெயின் ரோடு பாதி அளவு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும் என கூறினார்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil