இந்தியாவில் கொரோனா தொற்று முடிந்து வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி அடைய துவங்கிய நிலையில் இந்திய மக்கள் மத்தியில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இந்தத் திடீர் மாற்றம் எதனால் உருவானது என்பது தான் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஒருப்பக்கம் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் புதிய கட்டுமானங்கள் பாதியில் நிற்கும் நிலையிலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ள நிலையிலும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமடைந்துள்ளது.
ஆனால் இந்தச் சூழலில் ஆடம்பர வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது வியப்பு அளிக்கிறது.
சீனா-வின் திடீர் அறிவிப்பு.. 300 பில்லியன் டாலர் ஒதுக்கீடு.. பிழைக்குமா ரியல் எஸ்டேட்..!

இந்தியா
கொரோனா தொற்றுநோய் கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 17.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சம்பளக் குறைப்பு மற்றும் வேலையின்மை ஆகியவை மலிவு விலையில் வீடுகள் விற்பனைகளையும் கடுமையாகப் பாதித்தன. ஆனாலும் சொகுசு வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்திலும் அதிகரித்துள்ளது.

வீடு விற்பனை
கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019ல் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் 2.61 லட்சம் வீடுகள் அந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் வெறும் 7 சதவீத வீடுகள் மட்டும் தான் ஆடம்பர வீடுகள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் 1.84 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 14 சதவீத வீடுகள் ஆடம்பர வீடுகள்.

வித்தியாசம்
மொத்த வீடு விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது மூலம் மலிவு விலையில் வீடுகள் விற்பனைகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இதேநேரத்தில் ஆடம்பர வீடுகளின் விற்பனையில் பெரிய வித்தியாசம் உள்ளது.

மலிவு விலை வீடுகள்
மறுபுறம், மலிவு விலை வீடுகள் பிரிவு (ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான விலை) அதன் விற்பனைப் பங்கு 2019 இல் 38 சதவீதத்திலிருந்து H1 2022 இல் 31 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மலிவு வீடுகள் விற்பனை பாதித்துள்ளது நாட்டின் பொருளாதார நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பெரும் பணக்காரர்கள்
கொரோனா தொற்றுக் காலத்தில் பெரும் பணக்காரர்களுக்குக் கிடைத்த அதிகப்படியான பங்குச்சந்தை, தங்கம் மீதான லாபத்தை ஆடம்பர வீடுகளில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இதனாலேயே ஆடம்பர வீடுகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக HNI பிரிவு முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆடம்பர வீட்டில் முதலீடு செய்துள்ளனர்.
Why sales of luxury homes hits roof after the pandemic?
Why sales of luxury homes hits roof after the pandemic? இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்குத் திடீர் டிமாண்ட்.. என்ன காரணம்..?!