சென்னை: நடிகர்கள் அருண் விஜய் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ்.
ஈரம், குற்றம் 23 படங்களின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த வெப் சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் புரோமோஷனில் கலந்து கொண்ட வாணி போஜனை பற்றி வந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார் வாணி.
வீங்கிய முகம்
சமீபத்தில் இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் வாணி போஜனை பார்த்த பலரும் அவரது முகம் வீங்கியுள்ளது பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பாரோ, வாணி போஜனுக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். அதன்பிறகு வாணி போஜன் கொடுத்துள்ள பேட்டியில் அந்த விமர்சனங்களுக்கு விடையளித்துள்ளார். அன்று தனக்கு பீரியட்ஸ் என்றும் அதனால் முதலில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயங்கியதாகவும் பின்னர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றதால்தான் அதில் பங்கேற்றதாகவும் வாணி கூறியுள்ளார். அந்த சமயத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படித்தான் அன்று என் முகம் வீங்கியது போல் தோற்றமளித்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்பு புடவை
அதேபோல அந்நிகழ்ச்சியில் கருப்பு சேலை அணிந்து சற்றே கவர்ச்சியாக காட்சியளித்தார் வாணி போஜன். அதை வைத்தும் வாணி போஜன் கவர்ச்சிக்கு மாறியதாக சிலர் விமர்சித்திருந்தனர். இதற்கும் விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக நடிகைகள் என்றாலே கவர்ச்சியாகத்தான் பார்ப்பார்கள். அப்படி இருக்கையில் முழுதாக போர்த்திக் கொண்டு சேலை அணிந்து வந்தாலும் ஹாட் பிக்ஸ் என்று டேக் கொடுத்து புகைப்படங்களை பதிவேற்றுவார்கள். அது மட்டுமின்றி வேறு ஏதாவது இணையதளங்களில் கூட தவறான கண்ணோட்டங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவார்கள். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து நடிகைகளுக்குமே நடக்கும். அதனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார்

மஹான் சம்பவம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட வாணியை வைத்து ஒரு பகுதி ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக். ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக சூட்டிங் தாமதமானதால் மீதமுள்ள படப்பிடிப்பை எடுக்க முடியாமல் வாணியிடம் கூறிவிட்டு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மொத்தமாக நீக்கி படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தார் கார்த்திக்.

வாணி மகிழ்ச்சி
தன்னுடைய காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்ற வருத்தம் சிறியதாக இருந்தாலும் பின்னர் டெலிட்டட் சீன்ஸ் என்று அந்த காட்சிகள் வெளியானது வாணிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாம். காரணம் சில கதாநாயகிகள் படம் நடித்து அதன் மூலம் பிரபலமாவார்கள். ஆனால் உனது காட்சி வராமலேயே நீ மகான் படம் மூலம் பிரபலமாகிவிட்டாய் என்று பலரும் தன்னிடம் கூறியதாக வாணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.