மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு: குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் இலங்கை மின்சார சபையின் செலவீனங்களைப் பார்க்கும்போதுஇ மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக மின்சார சபை 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலுத்த உள்ளதாகவும்இ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் செலுத்த வேண்டிய தொகை 3100 கோடி ரூபா என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார சபையினால் செய்யக்கூடிய சில பணிகள் கடந்த காலங்களில் வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மின்சார சபையின் மாபியாவுக்கு எதிராக செயல்படும் போது தான் தனியாக இருந்த நேரங்களும் இருந்தன என்றும் அவர் கூறினார்.

அத்துடன், மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் எவ்வித சேவை மதிப்பீடும் இன்றி வருடாந்தம் 25 வீத சம்பள அதிகரிப்பை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

எனவேஇ இவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.