அனைத்து வகை மொபைல்களுக்கும் இனி ஒரே சார்ஜர்… தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஆலோசனை!

நாம் பயன்படுத்தும் பல மொபைல்களுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில மாடல்களுக்கு சில சார்ஜர் உபயோகப்படாது. ஒருசில குறிப்பிட்ட மாடல்கள் மொபைல் போன்களுக்கு தனித்தன்மையாக சார்ஜர் இருந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்துடன் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் போனை விற்றுவிட்டு வேறு மொபைல் போன் வாங்கினால் புதிதாக சார்ஜர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய … Read more

Tamil News Live Update: ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கு.. 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates இபிஎஸ் தேர்வு செல்லாது.. நீதிமன்றம் தீர்ப்பு சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது, அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே … Read more

முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக் கொலை.. 12பேர் கொண்ட கும்பலுக்கு வலை.!

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளரை வெட்டிக் கொலை செய்த 12பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொத்த தெருவைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கதிரவன் இடையே கடந்த ஆண்டு ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கதிரவனை தாக்கியது தொடர்பாக கைதான கண்ணன் பின்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 15நாட்களுக்கு முன்பு வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது … Read more

போலி, முறைகேடு பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமல் – 12 ஆயிரம் புகார் மனுக்கள் குவிந்தன

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன. தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அன்றே … Read more

உடல்நிலை காரணமாக பதவியை ஏற்க முடியவில்லை – ராஜினாமா குறித்து சோனியாவுக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத்?

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. குலாம் நபி ஆசாத்இந்நிலையில், அங்கு சட்டப் பேரவை தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை … Read more

பாகிஸ்தான் திரும்புகிறார் முன்னாள் பிரதமர் நவாஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி பெற்று 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் அதன் … Read more

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி: அனிதா மாபெல் மீதான வழக்கு ரத்து!

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேசன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றியவர் இளஞ்செழியன். இவர் கட்டிடப்பிரிவு உதவி இயக்குராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சாதி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் கூறி … Read more

மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு.. 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என தாலிபன் அறிவிப்பு.!

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. Source … Read more

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று … Read more