இந்தியாவுக்குத் தேவை டெஸ்லா இல்லை.. ஆட்டோக்கள் தான்.. ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் ஆடம்பர கார்களை வாங்க விரும்புபவர்கள் டெஸ்லா மற்றும் பிற எலக்ட்ரிக் கார்களை 60,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி வருமான 2,400 டாலர் வரையில் மட்டுமே உள்ளவர்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க கனவு தான் கான வெண்டும்.

எலக்ட்ரிக் கார்கள் விலை இப்படி இருந்தால் எப்படி நாம் காற்றும் மாசுவை குறைக்க முடியும். பிரதமர் மோடி சென்ன படி 230-ம் ஆண்டுக்கு இந்தியாவில் 50 சதவீத வானங்களை எலக்ட்ரிக்காக மாற்ற முடியும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் வாட்டர் பியூரிபையர் நிறுவனம்.. ரூ.1500 கோடி முதலீடு..!

இந்தியா - அமெரிக்கா

இந்தியா – அமெரிக்கா

அமெரிக்காவில் 1000 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 980 நபர்களிடம் கார் இருக்கும். அதுவே இந்தியாவில் 1000 நபர்களுக்கு 22 நபர்களிடம் மட்டுமே கார்கள் உள்ளது. அப்படி என்றால் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன கனவு எப்படி சாத்தியமாகும்.

இந்தியாவில் சென்ற நிதியாண்டில் 4,30,000 எலர்க்ட்ரிக் வானங்களை நிறுவனங்கள் விற்றுள்ளன.. அதில் கார்கள் என்று பார்த்தால் 18,000 மட்டுமே. இதுவே அமெரிக்காவில் 2021-ம் ஆண்டு 4,87,000 எலக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 90 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & ஆட்டோக்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & ஆட்டோக்கள்

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கார்கள் பயன்பாடு குறைவு என்பதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவை தான் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு வேகமாக வளர வழிவகுக்கும்.

ரிக்‌ஷா
 

ரிக்‌ஷா

டெல்லியில் காற்றும் மாசு ஏற்படுவதாக ரிக்‌ஷாக்கள் பல எலக்டிரிக் வாகனங்களாகக் கடந்த சில ஆண்டுகளாகவே மாறி வருகிறன. அதிலும் இந்த ரிக்‌ஷாக்கள் 1,000 டாலர்கள் முதல் கிடைக்கின்றன. அரசும் இவற்றை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறன.

டெஸ்லா - ரிக்‌ஷா

டெஸ்லா – ரிக்‌ஷா

எனவே இந்தியாவில் 50 சதவீத வானங்களை 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக்காக மாற்ற நமக்கு தேவை டெஸ்லா இல்லை. இது போன்ற ரிக்‌ஷா, ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்கள் தான் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

ஒலாக் எலக்ட்ரிக் நிறுவன தலைவரான பாவிஷ் அகர்வால் உலஞ் பல்வேறு நாடுகள் 60,000 டாலர் கொடுத்து கார் வாங்கும் நிலையில் இல்லை. வெப்பமான, தூசி நிறைந்த தட்பவெப்ப நிலைகள், அதிக பள்ளமான சாலைகளில் சேவை செய்வதற்கான தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமானது. இந்தியா உலகின் பிற பகுதிகளின் மிக அழகான நுண்ணுயிர் போன்றது. எலக்ட்ரிக் வானங்களை இங்கே கட்டமைக்க முடிந்தால், சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

 எலக்ட்ரிக் வானங்கள்

எலக்ட்ரிக் வானங்கள்

எலக்ட்ரிக் வாகனம் என்பது இந்தியாவுக்கான தீர்வு மட்டுமல்ல. இது உலகத்திற்கான தீர்வு. மனித இனத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் வசிக்கும் இந்தியா, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உலகை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்க வேண்டியிருந்தது. “இந்தியா இல்லாமல், அது நடக்காது” என்றும் பாவிஷ் அகர்வால் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India No Need Tesla. Only Need Electric Mopeds And Rickshaws. Why?

India No Need Tesla. Only Need Electric Mopeds And Rickshaws. Why? | இந்தியாவுக்கு தேவை டெஸ்லா இல்லை.. ஆட்டோக்கள் தான்.. ஏன் தெரியுமா?

Story first published: Monday, September 5, 2022, 22:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.