மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம், பிரபு, ஜெயராமன், பிரகாஷ்ராஜ், ரகுமான், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பொன்னியின் நதி மற்றும் சோழா சோழா ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் ஜெயராம் மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் இன்று வெளியானது.
ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா. #ActorJayaram😵💫 https://t.co/1TvBBD2L5d
— Actor Karthi (@Karthi_Offl) September 5, 2022
ஆழ்வார்க்கடியான் நம்பி-யாக நடிக்கும் நடிகர் ஜெயராம் போஸ்டரை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி “ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை…. சரியான தொல்லையப்பா” என்று பதிவிட்டிருக்கிறார்,